என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேராசிரியர் மா.நன்னன் மனைவிக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- பேராசிரியர் மா. நன்னனின் மகள் அவ்வை , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கவிதை வாசித்தார்.
- துணைவியார் பார்வதி அம்மாளுக்கு நூலுரிமை பரிவுத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் எழுதிய நூல்கள், கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் பார்வதி அம்மாளுக்கு நூலுரிமை பரிவுத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வின்போது, பேராசிரியர் மா. நன்னனின் மகள் அவ்வை , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கவிதை வாசித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவ்வை அருள், பேராசிரியர் நன்னனின் மகள்கள் வேண்மாள், அவ்வை மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.






