என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
- வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
- பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
சென்னை:
வீரத்தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
"வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!"-எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story






