search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீரில் மூழ்கி இறந்த 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    நீரில் மூழ்கி இறந்த 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாணவன் அபினேஷ் உயிரிழந்துள்ளார்.
    • உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், வாராப்பூர் உள்வட்டம், உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி (10), மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய 3 சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (16) என்பவர் அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×