search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு 4 மணி நேரத்தில் ரெயிலில் செல்லலாம்
    X

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு 4 மணி நேரத்தில் ரெயிலில் செல்லலாம்

    • சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்து உள்ளதால் வரும் நாட்களில் பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

    அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பெங்களூர் செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இப்போது வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    இது 4 மணி நேரமாக குறையும். சதாப்பதி அல்லது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் தற்போதுள்ள 6 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறையும். அரக்கோணம்-ஜோலார்பேட்டை இடையே பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் 130 கி.மீ. வேகத்தில் 124 ரெயில்களை இயக்க அனுமதி அளித்து உள்ளது.

    இதுபற்றி ரெயில் இயக்குனரகம் என்ஜின் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    எல்.எச்.பி. பெட்டிகள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதே வேளையில் ஐ.சி.எப். வடிவமைப்பு பெட்டிகள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடியவை. பல ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இருப்பதால் பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளதால் படிப்படியாக ஒவ்வொரு ரெயில்களையும் அதிவேகத்தில் இயக்க முடிவு செய்யப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

    பெங்களூர் மற்றும் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் சென்னை மற்றும் அரக்கோணம் இடையே 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதையை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பதன் மூலம் மற்ற ரெயில்களும் சிறந்த வேகத்தில் இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×