என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சென்னை-டெல்லி விமானத்தில் பயணம் செய்தபோது அவசரகால கதவை தொட்ட என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு
  X

  சென்னை-டெல்லி விமானத்தில் பயணம் செய்தபோது அவசரகால கதவை தொட்ட என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  • மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

  விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கதவை திறந்து சர்ச்சையில் சிக்கினார். இதே போல் மேலும் சில சம்பவங்கள் நடந்தன.

  இதைத் தொடர்ந்து விமானத்தின் அவசர கதவு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியது. அத்து மீறலில் ஈடுபடும் பயணிகள் மீது விமான நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

  இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.

  இதனை கவனித்த விமான பணிப்பெண்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இதுபற்றி விமான கேப்டனிடமும் தெரிவித்தனர்.

  இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் மாணவரின் செயல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

  இது தொடர்பாக அந்த மாணவர் கூறும்போது, "நான் விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யவில்லை. அதன் கைப்பிடியை தொட்டுப் பார்த்தேன்" என்றார்.

  இதுகுறித்து போலீசார் கூறும்போது, "விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்றதாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மாணவர் கைது செய்யப்படவில்லை" என்றனர்.

  Next Story
  ×