search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை சரிவு... காரணம் இதுதான்...
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை சரிவு... காரணம் இதுதான்...

    • மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது.
    • விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் வழக்கத்தைவிட சற்று கூடியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த வருடம் வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் கடுமையாக இருந்தது.

    இதனால் வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த வருடம் பீர் மது வகைகள் பெட்டி பெட்டியாக விற்பனையானது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதுக்கடைகளில் பீர் வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜில் பீர் பானங்களுக்கு தேவை அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. கால சூழ்நிலை மாற்றத்தால் மது விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இந்த மாதத்தில் திடீரென பீர் விற்பனை குறைந்ததற்கு காரணம் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதே காரணம்.

    இதனால் பீர் பிரியர்கள் ஹாட் மதுபானங்களுக்கு மாறியுள்ளனர். விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் வழக்கத்தைவிட சற்று கூடியுள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் போது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பீர் விற்பனை சரிந்தது.

    பீர் குடிப்பவர்கள், பிராந்தி, ரம், விஸ்கிக்கு மாறியுள்ளனர். மேலும் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் சிலர் விரதம் இருப்பார்கள். இதனால் வரும் நாட்களில் மது விற்பனை குறைய வாய்ப்புள்ளது.

    கார்த்திகை மாதம் வரை கோவில்களுக்கு செல்வதற்காக மாலை போடுவார்கள். அதனால் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் மது விற்பனை சற்று குறையக் கூடும் என்றனர்.

    Next Story
    ×