search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை- வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்
    X

    விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை- வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்

    • காட்டுயானை உணவு தேவைக்காக விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கமான நிகழ்வு.
    • வனத்துறையினர் அந்த காட்டுயானையை சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைக்குட்டை- அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது கரும்பு விவசாய நிலத்திற்குள் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் புகுந்தது.

    அப்பகுதியில் விவசாயிகள் சிலர் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை உணவு தேவைக்காக விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கமான நிகழ்வு.

    இந்த நிலையில் யானை விவசாய நிலத்திற்குள் நுழைந்ததும் ஏற்கனவே ரோந்து பணியில் இருந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் அந்த காட்டு யானையை சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

    Next Story
    ×