search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.பி. தேர்தலை சந்திப்பதா? எம்.எல்.ஏ. தேர்தல் வரை காத்திருப்பதா?- நடிகர் விஜய் தீவிர ஆலோசனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எம்.பி. தேர்தலை சந்திப்பதா? எம்.எல்.ஏ. தேர்தல் வரை காத்திருப்பதா?- நடிகர் விஜய் தீவிர ஆலோசனை

    • தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது.
    • படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

    இதுபற்றி விஜய் வெளிப்படையாக எதுவும் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் இப்போது அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    இதற்கான பிள்ளையார் சுழி கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் போடப்பட்டது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்த நாளை அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடினார்கள்.

    அதை தொடர்ந்து இப்தார் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். இவையெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்பதை விஜய் மக்கள் இயக்கத்தினர் உறுதிப்படுத்தினார்கள்.

    இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சர்வே நடத்தி வருகிறார்கள். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது. அவர்களுக்கு தனி விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார். நீங்கள் வேட்பாளர் என்றால் உங்களுக்கு மாற்று யார்?

    தொகுதியில் கட்சி வாரியாக இருக்கும் வாக்கு வங்கி நிலவரம்? உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் என்ன காரணம்? தொகுதியில் இருக்கும் பூத்களின் எண்ணிக்கை, வார்டு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் இந்த விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று சேகரிப்பார்கள். அதன் பிறகு மாவட்ட வாரியாக நேரில் அழைத்து விஜய் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.

    இப்போதைய நிலையில் அடுத்த ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதா? அல்லது 2026-ல் நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    விஜய்யின் இந்த அறிவிப்பு மூலம் அவர் அரசியலில் குதிக்கப் போவது உறுதியாகிவிட்டது.

    Next Story
    ×