என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

சென்னையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 7 ஊழியர்கள் சிக்கினர்: 'டிஸ்மிஸ்' நடவடிக்கை பாயுமா? என அச்சம்

- டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
- அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது. அதில் உள்ள விலைக்கு தான் அனைத்து மதுபாட்டில்கள், பீர் வகைகள் விற்க வேண்டும், கூடுதலாக ரூ.10 வைத்து விற்றால் விற்பனையாளர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவிட்டு இருந்தார்.
சமீபத்தில் காணொலி காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் கூட அதை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். கூடுதல் விலைக்கு விற்கப்படும் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார், மேலும் விற்பனையை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கடை வேலை நேரத்தில் பணியில் இல்லாத மேற்பார்வையாளர்கள் விற்பனை குறைவான கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 73 கடைகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 7 மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. டாஸ்மாக் பொது மேலாளர்கள் நடத்திய சோதனையில் இது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீது நிரந்தர பணி நீக்க நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
இதுவரையில் அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. இடமாற்றம், சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த முறை டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதால் கலக்கத்தில் உள்ளார்.
மத்திய சென்னையை தொடர்ந்து வடசென்னையில் உள்ள 81 கடைகள், தென் சென்னையில் உள்ள 89 கடை பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மதுபிரியர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலித்தால் கண்டிப்பான நடவடிக்கை என்பது அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில் இத்துறை வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றின் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும். அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
