என் மலர்

  தமிழ்நாடு

  ஓசூர் அருகே பஞ்சர் கடையில் கம்ப்ரசர் மின்மோட்டார் வெடித்து 4 பேர் படுகாயம்
  X

  ஓசூர் அருகே பஞ்சர் கடையில் கம்ப்ரசர் மின்மோட்டார் வெடித்து 4 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறிது நேரம் கழித்துதான் அவர்களுக்கு பஞ்சர் கடையில் மின்மோட்டார் வெடித்தது தெரியவந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர், அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் லதீப் (வயது38) என்பவர் மாற்றுத்திறனாளி சொந்தமாக பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். அங்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் வேலை செய்து வருகிறார்.

  இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய 2 பேர் லாரியை ஓசூருக்கு ஓட்டிவந்தனர். அப்போது அவர்கள் லதீப் கடையில் லாரியின் டயர்களுக்கு பஞ்சர் போடுவதற்காக நிறுத்தினர். உடனே லதிப் அந்த லாரியின் இருந்து சக்கரங்களை கழற்றி பஞ்சர் போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஏர் கம்பிரஷர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடையின் மேற்கூரை பறந்தது. இதனால் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அசம்பாவிதம் ஏதோ நடந்து விட்டதாக கருதி அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.

  சிறிது நேரம் கழித்துதான் அவர்களுக்கு பஞ்சர் கடையில் மின்மோட்டார் வெடித்தது தெரியவந்தது.

  இந்த வெடிவிபத்தில் பஞ்சர் கடையின் உரிமையாளர் லதீப், முருகன், முத்து, லிங்கப்பா ஆகிய 4 பேர் கை, கால்கள் முறிந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தனர்.

  அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஓசூர் அரசு மருத்துவமனையில் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு கை,கால்கள் முறிந்து ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயங்களுடன் இருந்த 4 பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த 4 பேரில் டிரைவர்கள் 2 பேரை பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லதீப், முருகன் ஆகிய 2 பேருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பட்டபகலில் திடீரென்று கம்ப்ரசர் மின்மோட்டார் வெடித்து 4 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×