என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்
- உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






