search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் திடீர் விரிசல்
    X

    சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் திடீர் விரிசல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விரிசல் ஏற்படுவதற்கு மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் காரணமல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • முகப்பு தோற்றம் அழகு வேலைபாட்டில் ஏற்பட்ட விரசலை சரி செய்தால் போதுமானது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பாரம்பரிய கட்டிடமாகும். இதனால் அதன் எழில் மாறாமல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அதே பொழிவுடன் இன்று வரை பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையின் அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாக ரிப்பன் மாளிகை திகழ்ந்து வருகிறது.

    ரிப்பன் மாளிகை கட்டிட வளாகத்தில் மெட்ரோ ரெயில் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 2 வருடத்திற்கு முன் தான் அந்த பணிகள் முடிவுற்று சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் முகப்பில் புதிதாக விரிசல் விழுந்துள்ளது. இந்த விரிசல் ஏற்படுவதற்கு மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் காரணமல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது சிறிய விரிசலாக்கத்தான் உள்ளது. இதனால் பாரம்பரிய கட்டிடத்தின் அடிப்படை கட்டமைப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மெட்ரோ ரெயில் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இது ஆழமான விரிசல் அல்ல. கட்டிடத்தின் நிலைத்தன்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

    முகப்பு தோற்றம் அழகு வேலைபாட்டில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தால் போதுமானது. மெட்ரே ரெயில் நிர்வாகத்தின் அறிக்கைக்காக காத்து இருக்கிறோம் என்றனர்.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்காக 2010-ம் ஆண்டு 4507 சதுர மீட்டர் ரிப்பன் கட்டிட வளாக இடத்தை அரசு ஒதுக்கியது. 16 மீட்டர் பூமிக்கடியில் நடந்த சுரங்கப்பாதை பணியின்போது லேசான விரிசல் ஏற்பட்டது. இதனால் பணிகள் தாமதமாயின. ஆனாலும் பாரம்பரிய ரிப்பன் கட்டிடத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்து 2019-ம் ஆண்டு மாநகராட்சியிடம் இடத்தை ஒப்படைத்த பின்னர் தொடர்ந்து கட்டிடத்தின் முகப்பில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ரிப்பன் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையை மாநகராட்சி கவுன்சிலர்கள் மெட்ரோ நிர்வாகத்திடம் கேட்டு வந்த நிலையில் இதுவரையில் எந்த தகவலும் தரவில்லை. ரிப்பன் கட்டிடம் மற்றும் விக்டோரியா ஹாலில் ஏற்படும் விரிசலுக்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாது என்று மாநகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரிப்பன் கட்டிடத்தின் பழமை மாறாமல் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அதில் உள்ள குறைகளை சரியாக்க அனைத்து முயற்சிகளையும் மாநகராட்சி எடுத்து வருகிறது என்றார்.

    Next Story
    ×