search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்: முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்: முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

    • ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை- சிறப்பு நீதிமன்றம்
    • ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்: முதன்மை அமர்வு நீதிமன்றம்

    அமலாக்க துறையால் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. அத்துடன் அவருடைய நீதிமன்ற காவல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியது.

    அதன்படி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முறையிடப்பட்டது.

    ஆனால், இன்று செந்தில் பாலாஜி ஜாமின் மனு பட்டியலிடப்படவில்லை. இதனால், மீண்டும் நீதிபதி அல்லியிடம் ஜாமின் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுததுக்கொள்ள முறையிடப்பட்டது.

    அப்போது நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×