என் மலர்
தமிழ்நாடு

தஞ்சையில் மது அருந்திய 2 பேர் உயிரிழப்பு - மதுவில் சயனைடு கலந்திருந்ததாக உடற்கூராய்வில் தகவல்
- தஞ்சையில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
- 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு கலந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தஞ்சை:
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற புகாரில் தனியார் பார் உரிமையாளர் பழனி மீது கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு கலந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களை உடற்கூராய்வு செய்ததில் சயனைடு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரையும் கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பபட்டதா அல்லது இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story