search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
    X

    மாணவன் தீபக்

    பள்ளி வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

    • தீபக் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோரும், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர்களும் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.
    • பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ராமேசுவரத்தில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு மீட்டனர்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அமைந்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், விவசாயி. இவரது மகன் தீபக் (வயது 15) 10-ம் வகுப்பும் படித்து வந்தார்.

    வழக்கத்தைவிட இன்று அதிகாலையிலேயே எழுந்த மாணவர் தீபக் குளித்து முடித்து, சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். அவரது தந்தை காரணம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று படிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்து பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.

    10-ம் வகுப்பு 'ஏ' பிரிவில் படிக்கும் அவர், முதல் மாணவராக பள்ளி வளாகத்திற்குள் வந்ததும், தனது புத்தகப்பையை வகுப்பறையில் வைத்துவிட்டு, 'சி' பிரிவுக்கு சென்றார். பின்னர் வகுப்பறை கதவுகளை பூட்டியுள்ளார். இதனை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்து மறைத்து எடுத்து வந்த நைலான் கயிற்றை அங்கிருந்த உத்திரத்தில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுமார் 8.30 மணியில் இருந்து அடுத்தடுத்து மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். 10-ம் வகுப்பு 'சி' பிரிவுக்கு சென்ற மாணவர்கள், வகுப்பறையில் தீபக் பிணமாக தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் அலறினர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தீபக் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோரும், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர்களும் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தீபக், வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ராமேசுவரத்தில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு மீட்டனர்.

    இந்தநிலையில் தான் இன்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். படிப்பு மட்டுமே அவரது இந்த தற்கொலை முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×