என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆம்னி பஸ்சில் வந்த வாலிபரிடம் ரூ.15 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
    X

    ஆம்னி பஸ்சில் வந்த வாலிபரிடம் ரூ.15 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

    • அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அவினாசி ரவுண்டானா பகுதியில் சோதனை செய்தபோது, சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சில் வந்திறங்கிய மதுரை சிவகங்கை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (வயது 27) என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் பண்டலாக ரூ.14 லட்சத்து 94 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரஹ்மத்துல்லாஹிடம் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×