என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்
- தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.






