search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாவட்டத்தில் மழை நீடிப்பு: சேலத்தை குளிர்வித்த மழை- மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது
    X

    மாவட்டத்தில் மழை நீடிப்பு: சேலத்தை குளிர்வித்த மழை- மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது

    • பெரமனூர் சாலையில் மரம் திடீரென சாய்ந்து விழுந்தது.
    • தொடர் மழை, பனியால் ஏற்காட்டில் காபி விவசாயம் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக நேற்றிரவு ஆனை மடுவு, தலைவாசல், காடை யாம்பட்டி, கரியகோவில், தம்மம்பட்டி, பெத்தநா யக்கன் பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை காலத்தில் பெய்தமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகராட்சியில் நேற்றிரவு சாரல் மழை பெய்த போது 15-வது கோட்டம் பெரமனூர் சாலையில் ஒரு மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

    பின்னர் மாநகராட்சி ஊழியர்களை, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.

    மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. இடையில் பனி மூட்டமும் காணப்படுகிறது. குளிர் அதிகமாக இருப்பதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துவிட்டது. குளிர் மற்றும் காற்று அதிகமாக வீசுவதால் உள்ளூர் வாசிகள் பெரிதும் சிரமப்டுகின்றனர். ஸ்வெட்டர், குல்லா போன்ற உடைகள் அணிந்து தான் வெளியே வேண்டி உள்ளது.

    பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். தொடர் மழை, பனியால் ஏற்காட்டில் காபி விவசாயம் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம் மாவட்டம் முழுவதும் இன்று தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை தூறலாக நீடித்ததால் சேலத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை வருகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 16 மி.மீ. பதிவாகி உள்ளது . தலைவாசல்-11, காடை யாம்பட்டி-10, கரிய கோவில்-10, தம்மம் பட்டி-9, பெத்தநாயக்கன்பாளை யம் 8, மேட்டூர் 7.6, கெங்கவல்லி 6, வீரகனூர் 6, ஏற்காடு 5.6, சேலம் 4.2, எடப்பாடி 4, ஆத்தூர் 2 மி.மீ. என மவட்டம் முழுவ தும் 98.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×