என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை- திருத்தணியில் 45 மி.மீட்டர் பதிவு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை- திருத்தணியில் 45 மி.மீட்டர் பதிவு

    • திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு கனமழை கொட்டியது.
    • திருத்தணி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, திருவலாங்காடு, ஈக்காடு, தாமரைப்பாக்கம், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் அரைமணி நேரம் நீடித்து பின்னர் சாரல் மழையாக கொட்டியது.

    இதேபோல் திருத்தணி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, திருவலாங்காடு, ஈக்காடு, தாமரைப்பாக்கம், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகமாக திருத்தணியில் 45 மி.மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    திருத்தணி - 45

    திருவலாங்காடு - 29

    திருவள்ளூர் - 27

    ஆவடி - 24

    பூண்டி - 22

    பூந்தமல்லி - 14

    தாமரைப்பாக்கம் - 13

    ஜமீன் கொரட்டூர் - 10

    பொன்னேரி - 7

    பள்ளிப்பட்டு - 5

    ஊத்துக்கோட்டை - 5

    ஆர்கே பேட்டை - 2

    சோழவரம் - 2

    புழல் - 1.

    Next Story
    ×