search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன்

    • வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மோடி கொண்டு வந்து இருக்கிறார்.
    • தவறு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மோடி 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு பல முன்னேற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. மகளிருக்கு 33 சதவிதம் இட ஒதுக்கீடு கவலை அளிக்க கூடியது இல்லை. இங்கு இருக்க கூடியவர்களுக்கு கவலை அளிக்கிறது. காரணம் என்னவென்றால் நாடு வேகமாக முன்னேறுகிறது.

    அதைப்பற்றி தவறு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மோடி 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    தென் பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தொகுதியில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என கேள்விப்பட்டேன். வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மோடி கொண்டு வந்து இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி மக்களுக்கு செயல்படவைக்க வேண்டும்.

    அமைச்சர் கீதாஜீவன் 33 சதவித இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது என்று நேற்று கூறினார். மகளிர் இட ஒதுக்கீடு 33 சதவீதம் எங்களை பொறுத்த அளவிற்கும் வரும். அவர்களை பொறுத்த அளவிற்கு வராது. அவர்கள் நெகட்டிவாக யோசிக்கிறார்கள். வராது என்று சொல்லிக் கொண்டிருந்தால் பாராளுமன்றத்திலும் இதுதான் அவர்களுடைய மனநிலை. அவர்கள் வரவேண்டாம் என்று நினைத்தார்கள்.

    முன்னர் கூட்டணி ஆட்சியில் அதிக பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் கொண்டும் வர முடியவில்லை. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுத்து 2028 அல்லது 29-ல் வரும். இதற்கு முன்னர் வருமா, வராதா என்றனர்.

    ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர்கள் இப்படி பேசகூடாது. 33 சதவீதம் இட ஒதுக்கீட்டால் பல பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்கும்போது அவர்களுக்கு எப்படி பிடிக்கும்? அரசியலில் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதே என்று பெண்ணாக இருந்து முதலில் வரவேற்போம். அதற்கு அப்புறம் விமர்சிப்போம். இதுதான் இங்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. நல்லது செய்தாலும் வரவேற்பது கிடையாது.

    இது மிகப்பெரிய சமுதாயப் புரட்சி. சிறிய மாநிலம் புதுச்சேரியில் 13 பெண் எம்.எல்.ஏ.க்கள் உட்காரப் போகிறார்கள். என்னதான் விமர்சனம் செய்தாலும் நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.

    காவிரி நீர் வரும், ஆனால் வராது. தற்போது கூட்டணியில் தானே உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுவர வேண்டியது தானே. 9 வருடமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது.

    சென்னையில் இசை கச்சேரியை இவர்களால் கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. ஆனால் டெல்லியில் மிகச் சிறப்பாக ஜி 20 மாநாடு நடத்தினோம்.

    2015-ல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் 2023 முடிவடையும். திட்டம் என்று வரும் போது 8 வருடம் ஆகும். இது தான் எதார்த்தமான உண்மை. உலகத்துக்கே தெரியும் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×