என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாளை பொங்கல் திருநாள்- தலைவர்கள் வாழ்த்து
    X

    நாளை பொங்கல் திருநாள்- தலைவர்கள் வாழ்த்து

    • தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அனைவருக்கும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க ஆசியும் அருளும் உண்டு.
    • மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்க, இல்லங்கள் தோறும் இனிமை பொங்க, நாடு பசுமையான வளத்துடன் செழித்தோங்கட்டும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மையையும் பாரம்பரிய உணவுதானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளப்பெருக்குடனும், உவகையுடனும், உற்சாகத்துடனும் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்! தினந்தோறும் செழிக்கட்டும் செல்வங்கள் என்று நெஞ்சார வாழ்த்தி என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட விவசாய திருநாள்.

    தமிழர்களின் உரிமைகள், பண்பாடு, தனித்துவத்தை பாதுகாப்பதற்கு உரிய சூழல் வருகிற பொங்கல் புத்தாண்டில் நிச்சயம் தொடங்கும் என்று நம்புகிறோம். தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனங்கனிந்த பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலுமுள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    மதங்கள், சாதிகள் என அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, இயற்கையைப் போற்றி, உழைப்பின் உன்னதத்தை உயர்த்திக் காட்டும் இந்த நாளின் சிறப்பை மென்மேலும் வளர்த்தெடுப்போம், மக்கள் ஒற்றுமைத் திருவிழாவாக, தமிழ்வெளியெங்கு கொண்டாடி மகிழ்ந்திருப்போம்.

    பா.ம.க. தலைவர் அன்பு மணி ராமதாஸ்:-

    தைப்பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப் புத்தாண்டும் வழங்க வேண்டும். அத்துடன் நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தமிழர்கள் அனைவரும் இயற்கையை காக்க தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

    உழவுத் தொழில் மேம்பட, உழவர்கள், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர, தமிழ் மக்கள் நலன் காக்க, வளமான தமிழகம் உருவாக பொங்கல் திருநாளில் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

    தமிழர்களாகிய நம் பண்பாட்டை, மாண்பை, பழமையை நிலைநாட்டும் தனிப்பெரும் திருவிழாவான தைப்பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    டி.டி.வி.தினகரன்:-

    தமிழர்களின் தனிப்பெரும் விழாவாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டில் மக்கள் நலம், மண்வளம், அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். தைப்பொங்கல் திருநாள் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்க, இல்லங்கள் தோறும் இனிமை பொங்க, நாடு பசுமையான வளத்துடன் செழித்தோங்கட்டும்.

    தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தமிழகம் மட்டுமல்ல உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழவும், வாழ்வில் ஏற்றங்கள் பலகண்டு உலக சமுதாயத்திற்கு முன்மாதிரியானது தமிழ் சமுதாயம் என்று அனைவரும் போற்றிட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    உலக தமிழ் வாழ் மக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று பிறக்கின்ற "தைத் திருநாள்" உழவர்களுக்கு நலம் சேர்க்கும் ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை அன்னை, நமக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான அளவு மழையை பொழிந்து, நாம் தண்ணீருக்காக எவரிடத்திலும் கையேந்தி நிற்காத தன்னிறைவு காண அருள வேண்டும்.

    இந்த இனிய பொங்கல் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர்பீட ஆன்மீக குரு பங்காரு அடிகளார்:-

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அனைவருக்கும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க ஆசியும் அருளும் உண்டு. பொங்கல் பண்டிகையை தமிழர்களுக்கு மட்டுமல்ல அக்கம்பக்கத்தினருக்கும், தூரத்து உறவினர்களுக்கும் கூட வாழ்த்து தெரிவித்துக் கொண்டாட வேண்டும்.

    விழாவினால் மட்டும் தான் அமைதி கிடைக்கும் வாழ்த்து கிடைக்கும், உறவு கிடைக்கும், பந்த பாசம் கிடைக்கும். மனிதன் உழைத்து வாழ வேண்டும். இயற்கையை போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும். தாய் தந்தையரை வணங்கி அவர்களை போற்ற வேண்டும்.

    மேலும் வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

    திருநாவுக்கரசர் எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் கோல்டன் அபு பக்கர், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழி லாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தர கர்கள் நலச்சங்க இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், விளையாட்டு வீரர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் அய்யப்பன், தமிழ்நாடு அனைத்து வினியோக தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சிவராம கிருஷ்ணா, வீரத் தமிழர் பேரவை நிறுவனர் டாக்டர் தங்கபாஸ்கர், அகில இந்திய காந்தி காமராஜ் கட்சி மாநில தலைவர் டாக்டர் மணியரசன், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் மு.பன்னீர்செல்வம், நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×