என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சம்பவ இடத்தில் திரண்டிருந்த மக்கள்
விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பு
- விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை சடலமாக மீட்டனர்.
விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






