search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த வரும் 26-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    X

    தமிழகத்தில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த வரும் 26-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

    • தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
    • கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி நாளை மாலை காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.

    சென்னை:

    முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்பத்தப்படுகின்றன.

    இந்தத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி-மின்படிகட்டு, உள்ளூா் தயாரிப்பை முன்னிலைபடுத்தும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

    நாடு முழுவதும் உள்ள 1,318 ரெயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

    இந்த நிலையில், 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி நாளை மறுநாள் (26-ந்தேதி) தொடங்கி வைக்க உள்ளாா்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்கள் 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரெயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரெயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரெயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரெயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

    தமிழகத்தில் தெற்கு ரெயில்வே சாா்பில் 32 ரெயில் நிலையங்கள், தென் மேற்கு ரெயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரெயில் நிலையங்கள் என 34 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    இதில் திருநெல்வேலி ரெயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரெயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரெயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரெயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரெயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

    இந்தப் பணிகள் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.


    இந்தியாவில் 2 முதியோா் நல மையம் அமைக்கப்படும் என்று 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு 9 ஏக்கா் நிலத்தை கொடுத்து, தேசிய முதியோா் நல மையம் அமைய காரணமாக இருந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிரத்யேகமாக முதியோருக்காக மருத்துவமனை அமைந்துள்ளது.

    உளுந்தூா்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. மத்திய அரசின் 60 சதவீத நிதியிலும், மாநில அரசின் 40 சதவீத நிதியிலும் கட்டப்படவுள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ரூ. 23.75 கோடியில் அமைய உள்ளன.

    இந்தப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

    அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ. 1.75 கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ. 25 கோடியில் கட்டப்பட உள்ள காசநோய் ஆராய்ச்சி மையம் என 10 பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    கட்டி முடிக்கப்பட்ட ரூ. 313.60 கோடி மதிப்பீட்டிலான கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்க உள்ளாா்.

    Next Story
    ×