என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

பள்ளமொளச்சூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: சசிகலா தலைமையில் நாளை நடக்கிறது

- ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடக்கிறது.
- கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா.பெருமாள் செய்து வருகிறார்.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பள்ளமொளச்சூர் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவுக்கு வி.கே. சசிகலா தலைமை தாங்குகிறார். ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மகா கும்பங்கள் யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம் முதல்கால யாகசாலை சதுஸ்தான பூஜைகள், துவார பூஜை, கும்ப பூஜை, மண்டல பூஜை அக்னி பிரதிஷ்டை ஹோமங்கள், வேத ப்ரபந்தங்கள் சாற்றுமுறை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மூலஸ்தான உற்சவ விமான கலசங்களுக்கு 48 கலசதிருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரண்டாம் கால யாக சாலை சதுஸ்தான பூஜைகள் ஹோமங்கள், பூர்னாஹீதி வேத ப்ரபந்தங்கள் சாற்று முறை, சயனாதிவாசம் போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு விஷ்வரூப சேவை, கோபூஜை, 3 கால யாக சாலை சதுஸ்தான பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹீதி, யாத்ராதானம், கிரக ப்ரீத்தி பூஜைகள் நடக்கிறது.
காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் லக்னத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் விமானங்கள் மூல மூலமூர்த்திகளுக்கு மகாஸ்ம்ப்ரோஷன கும்பாபிஷேகம் திருவாராதனம் வேத ப்ரபதங்கள் சாற்று முறை ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா.பெருமாள் செய்து வருகிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு நாளை அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவுக்கு வரும் வி.கே.சசிகலாவை வரவேற்கும் வகையில் வழியெங்கும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. பள்ளமொளச்சூர் முழுவதும் வாழை மரங்கள், மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
