search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள்.... பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள்.... பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

    • மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
    • 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    சென்னை:

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களில் 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 95.44% தேர்ச்சியுடன் 2ம் இடத்தையும், மதுரை மாவட்டம் 95.25% தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

    Next Story
    ×