என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்: இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்: இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை

    • ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    • தேர்தல் நேரங்களில் ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வது, தேர்தல் விதிகளை மீறிய செலவினங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக என்னென்ன தேவைப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமான வரித்துறையினர் எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் நேரங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பது, பணப்பட்டுவாடா, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வது, தேர்தல் விதிகளை மீறிய செலவினங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    கூட்டம் முடிந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை காலை மீண்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்துகின்றனர். இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ நாளை மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    Next Story
    ×