என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதா..? அந்த வார்த்தைக்கே இனி இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம்
- முதல் முறை இணைந்தபோது, நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்தனர்.
- கொங்கு மண்டலத்தில் மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால், அவா் நன்றி மறந்தவராக செயல்பட்டார். எனக்கு நான்கரை ஆண்டுகள் பாடம் கற்றுக் கொடுத்தனர். எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ, அதை செய்தனர். இப்போது என்னை வெளியேற்றிவிட்டு பழனிசாமி சர்வாதிகாரியாக மாறி உள்ளார்.
பொதுக்குழு தொடா்பாக நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறை தீா்ப்பு வரும்போதும், உங்கள் நிலைப்பாடு என்ன என்று என்னைக் கேட்கின்றனா். மக்களை நாடிச் செல்கிறோம் என்பதுதான் அதற்குப் பதில். இணைப்பு என்ற வார்த்தைக்கே இனி இடமில்லை. முதல் முறை இணைந்தபோது, நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்தனர். இனிமேல் அதுபோல, தவறுகளை செய்ய மாட்டோம்.
திருச்சியைத் தொடர்ந்து அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் என அறிவித்தோம். மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






