என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகர்கோவில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: கோவை-நெல்லை செல்லும் ரெயில்கள் ரத்து
- நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் குருவாயூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இன்று இயக்கப்படவில்லை.
இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரெயில்களும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.






