என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போகியில் எரிக்கும் கழிவுகளை வீடு வீடாக சென்று சேகரிக்கும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள்
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை தெருத்தெருவாக சென்று சேகரித்தனர்.
- பல வீடுகளில் எரிப்பதற்காக வைத்திருந்த பழைய துணிகள், டயர்கள் மற்றும் கழிவுகளை வழங்கினார்கள்.
போகிப்பண்டிகையின் போது சென்னையில் வீடுகளில் பழைய துணிகள், டயர்கள் உள்ளிட்ட கழிவுகளை தெருவில் போட்டு எரிப்பது வழக்கம்.
இதனால் கடுமையான புகைமூட்டம் ஏற்படும். காற்றும் மாசுபடும். இதை தவிர்க்க இந்த மாதிரி கழிவுகளை வீடு வீடாக சென்று சேகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று தெருத் தெருவாக சென்று சேகரித்தனர். கழிவுகளை தெருக்களில் எரிக்காதீர்கள். எங்களிடம் கொடுங்கள் என்று வீடு வீடாக கேட்டு வாங்கினார்கள்.
பல வீடுகளில் எரிப்பதற்காக வைத்திருந்த பழைய துணிகள், டயர்கள் மற்றும் கழிவுகளை வழங்கினார்கள். இந்த பணிகள் தொடர்ந்து 13-ந் தேதி வரை நடத்தப்படுவதோடு மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
Next Story






