என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்தவர் லாரி மோதி பலி
    X

    மோட்டார் சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு வந்தவர் லாரி மோதி பலி

    • வரும் வழியில் உமாபதி என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்தார்.
    • பலியான உமாபதியின் மற்ற விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    பூந்தமல்லி:

    திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்து கோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பூந்தமல்லி நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது வரும் வழியில் உமாபதி(வயது22) என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்தார்.

    நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய உமாபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயக்குமார் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான உமாபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான உமாபதியின் மற்ற விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×