என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.
- உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.
உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித அடைப்பும் இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
Next Story






