search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    90 கி.மீ. தொலைவில் மிச்சாங்: மெல்லமெல்ல நகர்வால் வெளுத்து வாங்கும் கனமழை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    90 கி.மீ. தொலைவில் மிச்சாங்: மெல்லமெல்ல நகர்வால் வெளுத்து வாங்கும் கனமழை

    • 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்வதால் கனமழை வெளுத்து வாங்கும் என அறிவிப்பு.
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும்.

    மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- வடகிழக்குப் பகுதியில் சுமார் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

    இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. அதனைத்தொரடர்ந்து தற்போது தீவிர புயலாகியுள்ளது.

    இருந்தபோதிலும் 11.45 மணி நிலவரப்படி சென்னையில் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில், மணிக்கு 8 கி.மீ. அளவிலேயே நகர்ந்து வருகிறது. மிகவும் மெல்லமெல்ல நகர்வதால் மழை வெளுத்து வாங்குகிறது. பெரும்பாலான இடங்களில் 25 செ.மீ.-க்கு அதிகமான மழை பெய்துள்ளது. மழை நீர் வடியாததால் சென்னை மாநகரம் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    புயல் சென்னையை கடந்ததும் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும்.

    Next Story
    ×