search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
    X

    (கோப்பு படம்)

    நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    • தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×