என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்- கன்னியாகுமரியில் பரபரப்பு
- நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்
கன்னியாகுமரி:
நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்தார்.
வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






