என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
- போட்டியில் மொத்தம் மொத்தம் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
- இறுதிச்சுற்று முடிவில் 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன என்றும் 400 வீரர்கள் களம் கண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று முடிவில் 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாகப் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து ரஞ்சித் 13 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், 9 காளைகளை அடக்கி முரளி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
Next Story






