என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
    X

    லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

    • பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

    Live Updates

    • 21 March 2023 10:18 AM IST

      வேளாண்மையின் நோக்கம் பயிற்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.

      நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு.

      ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

    • 21 March 2023 10:16 AM IST

      வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை. தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய சவாலாக உள்ளது.

      உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

    • 21 March 2023 10:12 AM IST

      வேளாண்மையை தொன்று தொட்டு கடைபிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது.

      விவகாய நிலங்கள் குறைந்து வரும் காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

    • 21 March 2023 10:09 AM IST

      தமிழக சட்டசபையில் சரியாக 10 மணிக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அமைச்சர் பச்சை துண்டு அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

    • 21 March 2023 10:06 AM IST

      தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று பட்ஜெட் நகலை வைத்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×