search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலையாளிகள் கேரளாவில் இருந்து வந்து கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்தனர்- போலீஸ் டி.ஐ.ஜி பேட்டி
    X

    கொலையாளிகள் கேரளாவில் இருந்து வந்து கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்தனர்- போலீஸ் டி.ஐ.ஜி பேட்டி

    • தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 450 கிலோ கஞ்சாவும், அம்பாசமுத்திரத்தில் 100 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளன. மீதமுள்ள மற்றொரு குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. தற்போது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மணல் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சம்பந்தப்பட்ட 2 பேரும் கேரளாவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தோம். அதற்குள் அவர்கள் 2 பேரும் இங்கு வந்து மதுபோதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    கஞ்சா மற்றும் குட்கா தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல வழக்குகளில் தொடர்புடையவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறோம். சிலரை எல்லையில் வைத்து பிடித்துள்ளோம்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 450 கிலோ கஞ்சாவும், அம்பாசமுத்திரத்தில் 100 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×