என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தென்மேற்கு பருவ மழை தொடக்கம் எதிரொலி: மிளகு, ஏலக்காய் விலை உயர்வு
- மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
- கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது
மதுரை:
சந்தை நிலவரத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வரத்து குறைவு மற்றும் அதிகரிப்பு, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மார்க்கெட்டில் இன்றைய தானியங்கள் விலை நிலவரம் (கிலோவில்)
துவரம் பருப்பு 1 கிலோ ரூ.186, பாசிப்பருப்பு-ரூ.112, பாசிப்பயறு-ரூ.110, உளுத்தம் பருப்பு-ரூ.140, பச்சை பட்டாணி-ரூ.98, வெள்ளை பட்டாணி-ரூ.49, கருப்பு சுண்டல்-ரூ.94, வறுகடலை-ரூ.98, மொச்சை-ரூ.132, சிவப்பு தட்டை பயறு-ரூ.98, மசூர் துவரை-ரூ.70, சீரகம்-ரூ.370, சோம்பு-ரூ.130, கடுகு-ரூ.70, வெந்தயம்-ரூ.78, மல்லி பெருவெட்டு-ரூ.95, மல்லி சிறியது-ரூ.90, மீல் மேக்கர்-ரூ.89, கேழ்வரகு-ரூ.42, காணப்பயறு-ரூ.76, கோதுமை-36, கம்பு-ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற மிளகு இந்த வாரம் 100 ரூபாய் உயர்ந்து 750 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த வாரம் ரூ.2,400-க்கு விற்ற ஏலக்காய் 300 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.2,700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து அதிக அளவில் வரக்கூடிய முந்திரி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளதும் இந்த விலையறேற்றத்திற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.