search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் - சென்னை மெட்ரோ ரெயில் அதிர்ச்சி தகவல்!
    X

    ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் - சென்னை மெட்ரோ ரெயில் அதிர்ச்சி தகவல்!

    • குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன. இன்று சென்னையில் நடைபெற இருக்கும் முதல் குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    முன்னதாக நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மெட்ரோ ரெயில் உடன் கூட்டணி அமைத்து- சேப்பாக்கத்தில் போட்டியை காண மெட்ரோ ரெயில் மூலம் வரும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி வந்தது. அந்த வகையில், இன்று நடைபெற இருக்கும் குவாலிபையர் போட்டிக்கும் சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்றைய குவாலிபையர் போட்டியை காண சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரெயில் பயணம் வழங்கப்படாது என்று தெரியவந்துள்ளது. இன்றைய போட்டியை பிசிசிஐ நடத்துவதால், சேப்பாக்கத்தில் வழங்கப்படும் டிக்கெட்களை கொண்டு ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது.

    லீக் சுற்று ஆட்டங்களை போன்றே, குவாலிபையர் போட்டிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.

    இன்று (மே23) மற்றும் நாளை (மே 24) நடைபெற இருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய, வாட்ஸ்அப் சாட்பாட்-இல் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்ய வாட்ஸ்அப்-இல் இருந்த படி 8300086000 என்ற எண்ணிற்கு Hi என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின் வரும் வழிமுறைகளை பின்பற்றி டிக்கெட்களை வாட்ஸ்அப் செயலியிலேயே எடுக்கலாம். இது தவிர, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது சிஎம்ஆர்எல் மொபைல் செயலி மூலமாகவும் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், சென்னை மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணிக்கு பிறகு டிக்கெட் கவுண்டர்கள் இயங்காது என்பதால், பயனர்கள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    Next Story
    ×