search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    82 வயதிலும் கல்வியின் மீது ஆர்வம் குறையவில்லை: 25-வது பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்த முதியவர்
    X

    82 வயதிலும் கல்வியின் மீது ஆர்வம் குறையவில்லை: 25-வது பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்த முதியவர்

    • கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
    • வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது.

    சென்னை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த 82 வயது முதியவர் குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கல்வியின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக இவர் பணியில் இருக்கும்போதே 1964-ம் ஆண்டு முதல் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்து வருகிறார்.

    இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களை பெற்றுள்ளார். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும், பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்ப டிப்புகளும் முடித்துள்ளார். கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

    இந்நிலையில் குருமூர்த்தி தனது 25-வது பட்டப்படி ப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை படிப்பதற்கு முடிவு செய்தார். அதற்காக மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களை பெறுவதற்கு இளைஞரை போல உற்சாகத்துடன் அவர் வந்தார். அவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி பாராட்டி கவுரவித்தார்.

    இதுபற்றி முதியவர் குருமூர்த்தி கூறியதாவது:-

    படிப்பதற்காக நான் செலவு செய்யும் தொகையை செலவாக நினைத்ததே இல்லை. எனது அறிவை வளர்த்து கொள்ளும் விதமாகவே இந்த படிப்புகள் அமைந்துள்ளன. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை எனது படிப்புக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. வாட்ஸ் அப், பேஸ்புக்கில் மூழ்கி இன்றைய இளைய தலைமுறையினர் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

    வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது. இந்தப் படிப்புகள் என்னை உற்சாக மூட்டி என்றும் இளைஞனாக, மாணவனாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே இளைய தலை முறையினர் கல்வி கற்க அவர்களது நேரத்தை செலவிட வேண்டும். அப்படி பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் உதவிட செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×