என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு- உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு

- சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தகவல்.
- உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது.
சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் கோவில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை நடத்தி வருகிறார்.
விசாரணையில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால் சாவடி போலீசார் கைது செய்தனர். மேலும் முரளி கிருஷ்ணா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் பீர் பாட்டில்கள் சிதறி கொட்டிய இடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நிரஞ்சன் நேரில் ஆய்வு செய்துகின்றனர். உடன் தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.