என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திண்டுக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி ரூ.11லட்சம் பறித்த கும்பல்
    X

    காயமடைந்த டிரைவர்கள்.

    திண்டுக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி ரூ.11லட்சம் பறித்த கும்பல்

    • பாலகிருஷ்ணன் லாரியை நிறுத்தாமல் சென்றதால் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்தனர்.
    • தங்களை பின்தொடர்ந்து வந்த கார் எண் குறித்தும் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(53). லாரி டிரைவரான இவர் ஓசூரிலிருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மார்க்கெட்டில் இறக்குவதற்காக சென்றார். லாரியில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள காளையம்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார்(23). என்ப வரும் வந்து கொண்டிருந்தார். இவர்கள் தக்காளி லோடு இறக்கிவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இவர்களை பின்தொடர்ந்து வந்த கார் திடீரென மறிக்க முயன்றனர். ஆனால் பாலகிருஷ்ணன் லாரியை நிறுத்தாமல் சென்றதால் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை கட்டிப்போட்டு லாரியை தாங்களே ஓட்ட தொடங்கினர்.

    அப்போது மற்றொரு நபர் லாரியில் இருந்த ரூ.11.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டார். பின்னர் விருதலைப்பட்டியில் லாரியை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பிஓடியது. கைகள் கட்டப்பட்டு இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் தினேஷ் ஆகியோர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வெளியே வந்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தனர். தங்களிடமிருந்த ரூ.11.50 லட்சம் பணம், செல்போன்களை பறித்துச்சென்ற கும்பல் யார்? என்பது குறித்தும், தங்களை பின்தொடர்ந்து வந்த கார் எண் குறித்தும் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×