search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கோட்டையில் 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
    X

    செங்கோட்டை காலங்கரையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகள்.

    செங்கோட்டையில் 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது.

    செங்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    இதில் புதிதாக விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா மாநிலம், புதுவை, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு காகித கூழ் வாட்டர் கலர் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொண்டு செங்கோட்டை பகுதிகளுக்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தயாரித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சிலைகள் வடிவமைத்து உள்ளனர். இதனை வாங்குவதற்கு கேரளாவின் கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், கோட்டயம், தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-

    இந்தாண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரைய கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரிசி, கிழங்குமாவு, களிமண் போன்றவற்றால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது எங்களிடம் மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயன விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர் திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் அதாவது 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். அவைகள் செங்கோட்டை பகுதிக்கு மட்டுமல்லாது, கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×