search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்- 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு
    X

    முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்- 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு

    • பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.
    • தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.

    நேற்று மதியம் இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    திடீரென அந்த கும்பல் வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

    மேலும் ஜன்னல், பூந்தொட்டி, பிளாஸ்டிக் நாற்காலிகளையும் அந்த கும்பல் சூறையாடியது.

    தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பேச்சாளர் பிரிவு தலைவர் ரத்தினராஜ் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதன்பேரில், சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தி.மு.க. கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, பெண கவுன்சிலர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 427, 506/2 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×