search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள், பஸ்கள், ரெயில்கள் அவுஸ்புல்- அ.தி.மு.க. மாநாட்டுக்கு திரளும் தொண்டர்கள்
    X

    சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள், பஸ்கள், ரெயில்கள் 'அவுஸ்புல்'- அ.தி.மு.க. மாநாட்டுக்கு திரளும் தொண்டர்கள்

    • சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிறு) அ.தி.மு.க. வீரவரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் செல்கிறார்கள்.

    வெளியூர்களில் இருந்து செல்பர்கள் நாளை மதுரை செல்லும்படி பயணத் திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

    இதனால் அங்குள்ள லாட்ஜுகளில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார் கள். சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. இந்த லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதே போல் திருமண மண்டபங்களையும் முன் பதிவு செய்துள்ளார்கள். 21-ந்தேதி ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் திருமண வீட்டாரும் மண்டபங்களை முன்பதிவு செய்துள்ளார்கள். எனவே கட்சியினரை ஞாயிறு மாலையில் காலி செய்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே பல திருமண மண்டபங்களை வாடகைக்கு விட்டுள்ளார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் கட்சி பிரமுகர்கள் பலர் விமானங்களில் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    வழக்கமாக மதுரைக்கு விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் 19-ந்தேதி குறைந்த பட்ச கட்டணம் ரூ.12 ஆயிரம் என்று நிர்ணயித்துள்ளார்கள். அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமான கட்டணம் ரூ.8,564, 10.30 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் ரூ.10,297, 11.15 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ரூ.11,906.

    இதே போல் மாலை 4.55 மணி முதல் 7.40 மணி வரை செல்லும் 6 விமானங்களில் குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.16,702 வரை டிக்கெட் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படுகிறது. சிறிய விமானங்களில் 71 சீட்டும், பெரிய விமானங்களில் 210 இருக்கைகளும் இருக்கின்றன. ஒரு விமானத்தில் கூட இருக்கை காலி இல்லை. அனைத்து விமானங்களும் 'புல்' ஆகிவிட்டன.

    மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, செங்கோட்டை செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

    இதே போல் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களிலும் இருக்கைகள் இல்லை.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் பலர் கார், வேன்களை வாடகைக்கு அமர்த்தியும் செல்கிறார்கள். வேன்களுக்கு மதுரை சென்று வர ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

    Next Story
    ×