என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பணி நியமன ஆணை வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம்- மக்கள் நல பணியாளர்கள் 3 பேர் மயக்கம்
    X

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்கள் நலப்பணியாளர்களை படத்தில் காணலாம்.

    பணி நியமன ஆணை வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம்- மக்கள் நல பணியாளர்கள் 3 பேர் மயக்கம்

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, செங்கனிமற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்‌.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டின் முன்பு தி.மு.க. தேர்தல் வாக்குறுதி படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, செங்கனிமற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×