என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறார் சசிகாந்த் செந்தில்?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறார் சசிகாந்த் செந்தில்?

    • கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவருக்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

    இந்த தருணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக முன்னாள் ஐ.ஏ.ஐ சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.

    தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து கட்சி வென்ற பிறகு தமிழகத்துக்கு திரும்பினார். இதனால், கட்சி மேலிடத்தில் சசிகாந்த் மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், பாஜகவின் மாநில தலைவரான முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலைக்கு போட்டியாக, முன்னாள் ஐ.ஏ.எஸ்-ஆன சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×