search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காற்றாலை நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்: போலீசார் கைது செய்தபோது மயங்கிய மூதாட்டி
    X

    போராட்டத்தின்போது மயங்கி விழுந்த மூதாட்டி

    காற்றாலை நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்: போலீசார் கைது செய்தபோது மயங்கிய மூதாட்டி

    • குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
    • பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அப்பியம்பட்டி பகுதியில் தனியார் காற்றாலை அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச்செல்ல உயர் அழுத்த மின்கம்பங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்கம்பங்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்களை அமைக்க முயன்றபோது அதை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

    அப்போது ஒரு மூதாட்டி மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். அப்போது விவசாயி ஒருவரை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தகாத வார்த்தையால் திட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    Next Story
    ×