என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க ஆபரண பெட்டியை சுமந்து சென்ற பட்டிவீரன்பட்டி பக்தர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க அங்கி பெட்டியை சுமந்து சென்ற திண்டுக்கல் பக்தர்
- ஐயப்ப பக்தரான ராமையா கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் சேவை புரிந்து வருகிறார்.
- பரிமலையில் நடைதிறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் தவறாமல் சேவை செய்வதற்காக சபரிமலை சென்று விடுவார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா(58). ஐயப்ப பக்தரான இவர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் சேவை புரிந்து வருகிறார். சபரிமலையில் நடைதிறந்திருக்கும் மாத பூஜை நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் மண்டல, மகரவிளக்கு தினங்களில் சபரிமலையில் தங்கி அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு சார்பில் சேவை செய்து வருகிறார்.
மேலும் இவர் சபரிமலையில் நடைதிறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் தவறாமல் சேவை செய்வதற்காக சபரிமலை சென்று விடுவார். ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். அவசர கால பிரிவிலும் பணிபுரிந்து வருகிறார். இவரது சேவை பணிக்காக மண்டல பூஜையின்போது ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கியை சுமந்துவரும் வாய்ப்பினை அகிலபாரத ஐயப்பா சேவா அமைப்பு இந்த ஆண்டு வழங்கியுள்ளது.
நான் சபரிமலையில் தொடர்ந்து செய்து வருகிற சேவைக்காக அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தமிழ்மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமக்கும் அரிய பாக்கியத்தை எனக்கு வழங்கியுள்ளது. இதை என்வாழ்நாள் பாக்கியமாக எண்ணுகிறேன். என் ஆயுள் முழுவதும் சபரிமலையில் பக்தர்களுக்காக சேவை செய்து வருவேன் என்றார்.






