என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டி.டி.வி. தினகரன்
ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்- தினகரன் பேட்டி
- ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு அணியில் சேர வேண்டும்.
- தேசிய கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்ததால்தான் திமுகவை வீழ்த்த முடியும்.
அதிமுகவில் அணிகள் மீண்டும் ஒன்றிணைவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: எடப்பாடி தலைமையில் நாங்கள் இணையவே மாட்டோம் என்று நான் பல முறை தெரிவித்துள்ளேன். ஆனால் அதே நேரத்தில் நான் திரும்பவும் சொல்கிறேன்.
அம்மாவின் (ஜெயலலிதாவின்) உண்மை தொண்டர்களாக இன்றும் நினைப்பவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும், எல்லோரும் ஒரு அணியில் சேர வேண்டும். நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகள் மற்றும் தேசிய கட்சியுடன் சேர்ந்து (பாராளுமன்ற) தேர்தலை சந்தித்ததால்தான் திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story